மயிலை பங்குனி திருவிழாவும் வாயிலார் நாயினாரும்

மயிலை பங்குனி திருவிழாவும் வாயிலார் நாயினாரும்

ஞானசம்பந்தர் தன்னுடைய மயிலைப் பதிகத்தில் கபாலீஸ்வரத்தில் நடக்கும் எல்லா திருவிழாக்களையும் வரிசைப்படுத்தி, அதை பார்க்காமல் போனாயோ பூம்பாவாய்? யெனப்பாடி அச்சிறுமியை உயிர்த்தெழுவார்.

அப்படியான சிறப்பு மிக்க திருவிழாக்களில் ஒன்று தான் பங்குனி மாதத்தில் வரும் 63 நாயன்மார்களின் வீதி உலா. இன்று கோயிலை சுற்றிய கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு யென எல்லா வீதிகளிலும் மனித தலைகள். மூளை முடுக்கெல்லாம் சிவவாத்தியங்களின் இசைவெல்லம்.  எங்கும் மங்கலம் மங்கலம்.🙏

*******
அன்றைய தொண்டை நாடு திருமயிலையில் அவதரித்து சிவபதி அடைந்தவர் 63 நாயன்மார்களில்  ஒருவரான வாயிலார் நாயனார். 

அப்படி என்ன சிவத்தொண்டு பண்ணினார் அவர்? 
மனதால் சிவனை நினைத்தார். சிவத்தை மட்டுமே மானசீகமாக வணங்கி சிவகதி அடைந்தார். 

கோவிலுக்கு வெளியே, ஊர்வலத்தில், அவர் சிலை அலோகலப்பட்டுக் கொண்டிருக்க, கோயிலுக்குள்ளே முருகன் சன்னதிக்கு அருகே அவர் தம் சன்னதியில் மானசீகமாய் கபாலியை நினைந்து வணங்கி கொண்டிருக்கிறார். 

தெருவெல்லாம் அன்னதானம். கேட்காமலேயே நிறைய பிரசாதம் கிடைத்தது. 
ஓம் நமச்சிவாயா🙏

"மட்டிட்ட புன்னையங்
கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய்"

-திருஞானசம்பந்தர் 

Comments

Popular posts from this blog

உத்திரகோசமங்கை கும்பாபிஷேகம்

குச்சி மிட்டாயும் மலரும் ஞாபகமும்